/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் புட் கோர்ட்: எம்.எல்.ஏ., திறப்பு
/
கடலுார் புட் கோர்ட்: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : பிப் 19, 2024 05:45 AM

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் நவீன வசதிகளுடன் கடலுார் புட் கோர்ட் திறப்பு விழா நடந்தது.
வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார். கடை உரிமையாளர்கள் அருண்குமார், குரு, சுதர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., கடையை திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், சுதன்பவர் டெக் பூங்குன்றன், சுதா பூங்குன்றன் குத்துவிளக்கேற்றினர்.
விழாவில், வக்கீல்கள் சுப்ரமணி, கிருஷ்ணசாமி, லோகநாதன், சிவராஜ், தமிழரசன், ஜெயபாலன், அன்பரசன், சங்கர்ராமன், அருளப்பன், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சன் பிரைட் பிரகாஷ், அரிமா ராஜா, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உரிமையாளர்கள் கூறுகையில், 'இங்கு, கருப்பட்டி காபி, கருப்பட்டி டீ, இளநீர் பாயாசம், பிரஷ் ஜூஸ், ரோஸ் மில்க், வெஜ் சான்ட்விச் அன்டு பிரைஸ் காம்போ, கிளாசிக் பிரைடு சிக்கன் ரெகுலர், கிளாசிக் பிரைடு சிக்கன் டிரம்ஸ்டிக், கோன் ஷவர்மா, ரோல் ஷவர்மா, தந்துாரி, சிக்கன் பிரைடு ரைஸ், நுாடுல்ஸ், நான் அன்டு பட்டர் சிக்கன் காம்போ உட்பட பல்வேறு வகை உணவுகள் புதிய சுவைகளுடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.

