ADDED : அக் 09, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிப்பிட வசதியின்றி அவதி
தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் வேப்பூர் பஸ் நிறுத்தத்தில், பொது கழிவறை இல்லாததால், பல மணி நேரம் பயணித்து வருபவர்கள் சிரமமடைகின்றனர். எனவே, வேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை கட்ட வேண்டும்.
சூர்யபிரியா, வேப்பூர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை
திட்டக்குடி - சிறுபாக்கம் கூட்ரோட்டில் உள்ள சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பாதுகாப்பு வசதிகள் தர வேண்டும்.
ராஜேந்திரன், சிறுபாக்கம்
புறவழிச்சாலை பணி மந்தம்
விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் வரிவாக்கப் பணிகள் மந்தமாக நடப்பதால், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செல்வமணிகண்டன், விருத்தாசலம்.
வடிகால் அடைப்பு
விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் துார்ந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், விருத்தாசலம்

