/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகள் மைய கட்டுமான பணிகள் மந்தம்
/
குழந்தைகள் மைய கட்டுமான பணிகள் மந்தம்
ADDED : டிச 22, 2025 05:42 AM

நடுவீரப்பட்டு: குழந்தைகள் மைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பத்தில் குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் கட்டடம் முழுமையாக பழுதடைந்ததால், கடந்தாண்டு புதிய கட்டடம் கட்டுமான பணி துவங்கியது.
இதனால் குழந்தைகள் மையம் தற்காலிகமாக பக்கத்தில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் சஞ்சிவீராயன் கோவில் கிராமத்தில் கட்டப்படும் குழந்தைகள் மைய கட்டுமான பணியினையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

