/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு
/
பள்ளி வேனில் சிக்கி குழந்தை பரிதாப சாவு
ADDED : பிப் 08, 2024 02:30 AM
பண்ருட்டி:கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகன் நவீன்குமார் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். நேற்று காலை பள்ளி வேனில் மகனை அவரது தாய் ஏற்றிவிட்டார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயதான இரண்டாவது மகன் ரக் ஷன் வேன் டயருக்கு கிழே விளையாடி கொண்டிருந்ததை கவனிக்காமல் வேனை டிரைவர் எடுத்து விட்டார்.
அப்போது. வேன் பின்பக்க டயரில் குழந்தை சிக்கியது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியிலேயே குழந்தை இறந்தது. இச்சம்பவம் மேல்மாம்பட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

