ADDED : நவ 08, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: பு துச்சேரி முத்து மாணிக்க கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர், 57; இவர் தனது மனைவி மகாலட்சுமி; இருவரும், புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில், உறவினர் விசே ஷ நிகழ்ச்சிக்கு சென்றனர்.
தொடர்ந்து, சிதம்பரம் கஞ்சித் தொட்டியில், இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கன்னங்குடியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சென்று பார்த்த போது, மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, எட்டரை சவரன் செயின் காணாமல் போனது பார்த்து திடுக்கிட்டார். இது குறித்து பாஸ்கர், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

