/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
/
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
ADDED : ஏப் 05, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பெண்ணாடம் கிளை சார்பில், தமிழ் வருட 'விசுவாவசு' பஞ்சாங்கம் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெண்ணாடம் கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் அனந்த உடுப்பா, சங்க உறுப்பினர்களுக்கு 'விசுவாவசு' பஞ்சாங்கத்தை வழங்கினார். பிரளயகாலேஸ்வரர் கோவில் சுந்தர் குருக்கள் 'விசுவாவசு' ஆண்டுக்கான பஞ்சாங்க பலன்கள் குறித்து பேசினார்.
கார்த்திகேயன் குருக்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வரும், சித்திரை 1ம் தேதி மாலை 6:00 மணியளவில் புதிய பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

