/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., அரசை கண்டித்து வடலுாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து வடலுாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து வடலுாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து வடலுாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 19, 2024 06:02 AM

வடலுார்: வடலுாரில் வள்ளலார் பெருவெளியை சர்வதேச வியாபார மையமாக்க அடிக்கல் நாட்டிய தி.மு.க., அரசை கண்டித்து நகர பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ., வடலுார் நகர தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் பிச்சப்பிள்ளை முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டிய தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மாநில விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்டத் துணைத் தலைவர்கள் விஜயரங்கன், காசி தங்கவேல், அறிவழகன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சாமிதுரை, நிர்வாகிகள் ராஜேந்திரன், துரை, செந்தாமரை, ரமேஷ், செல்வமணி, தவபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.