ADDED : செப் 27, 2026 04:01 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்படி, விடுமுறை நாளான நேற்று வங்கிகள் இயங்கின.
வங்கி துறையில் வாரத்தில், 5 நாள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் வரும், 30ம் தேதி வரை, 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, ஞாயிற்று கிழமை விடுமுறை நாளான நேற்று, வழக்கம் போல் வங்கிகள் இயங்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, கடலுார் மாவட்டம் முழுவதும் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு கிராமிய வங்கிகள் என, 200க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் இயங்கின. பணம் டிபாசிட் செய்தல், பணம் எடுத்தால், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகை சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினர்.
