/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
/
முந்திரி ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
முந்திரி ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
முந்திரி ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
ADDED : மார் 12, 2024 06:43 AM

பண்ருட்டி, மார்ச் 12-
பண்ருட்டியில் முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, பாராட்டு விழா சங்கத்தின் சார்பில் நடந்தது.
தமிழக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய, வரி செலுத்திட வலியுறுத்தி வந்தனர்.
அந்த வரியை நீக்க, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அதன் காரணமாக, அரசு ஆணை மாற்றி அமைக்கப்பட்டது.
அதையடுத்து, சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மலர்வாசகம் தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி , தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் கேஷ்யூஸ் சங்கர் வரவேற்றார்.
ஏ.சி.ஐ., டிரேடர்ஸ் ஆறுமுகம், பகவதி கேஷ்யூஸ் நரேஷ் சந்த், ஜெயா கேஷ்யூஸ் ஜெயமூர்த்தி, நிஷா டிரேடர்ஸ் பாரதிதாசன், சுவாதினி கேஷ்யூஸ் சிவா, எஸ். வி.ஆர். கேஷ்யூஸ் பிரசாத், ஜெயா நட் புட்ஸ் பழனிவேல், மலர் இன்டர்நேஷனல் எழிலரசன், பிரதீபா கேஷ்யூஸ் பாலகிருஷ்ணன், ஜோதி கேஷ்யூஸ் மோகன்தாஸ், விஜய் இன்டர்நேஷனல் மணிவண்ணன், பிரதீ வெண்ட்ஜர்ஸ் மாரி செல்வம், ரீகல் பார்ம் இண்டஸ்ட்ரீஸ் சதீஷ் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

