/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி பட்டமளிப்பு விழா தேதி மாற்றம் அறிவிப்பு
/
கல்லுாரி பட்டமளிப்பு விழா தேதி மாற்றம் அறிவிப்பு
ADDED : அக் 25, 2025 02:50 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் இன்று (25ம் தேதி) நடக்க இருந்த பட்டமளிப்பு விழா, தொடர்மழை காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் முனியன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பு;
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் 2020 முதல் 2023 வரை கல்லுாரி முடித்த மாணவர்களுக்கு 25, 26, 27, ஆகிய மூன்று தேதிகளில் பட்டமளிப்பு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மேற்கண்ட தேதிகளில் நடக்க இருந்த பட்டமளிப்பு விழா, வரும் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் கல்லுாரி கலையரங்கத்தில் நடக்கிறது.
எனவே, மேற்கண்ட தேதிகளில் மாணவர்கள் வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று கூறப் பட்டுள்ளது.

