/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
புவனகிரியில் 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 03, 2024 12:20 AM
சென்னை- 'புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே, அரசு தடுப்பணை கட்ட மறுப்பதை கண்டித்து, கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வரும் 7 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பரங்கிப்பேட்டை கடலில் கலக்கும் வெள்ளாற்றின் வழியே கடல் நீர் உட்புகுந்து, நிலத்தடி நீர் பாதிப்பதை தவிர்க்க, கடந்த 2017 ஆக.,16 அன்று கடலுாரில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், வெள்ளாற்றின் குறுக்கே, பு.ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்தேன். அதற்காக ரூ.92.58 கோடி மதிப்பில், நிலங்கள் தேர்வு செய்து அரசுக்கு மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதுகுறித்து அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சட்டசபையில் இருமுறை பேசி உள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த திட்டம் என்பதால், தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வரும் 7 ம் தேதி காலை 9:30 மணிக்கு, புவனகிரியில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கும்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

