/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மர்ம பொருள் வெடித்து 5 சிறுவர்கள் 'அட்மிட்'
/
மர்ம பொருள் வெடித்து 5 சிறுவர்கள் 'அட்மிட்'
ADDED : ஆக 30, 2025 11:50 PM

பண்ருட்டி:மர்ம பொருள் வெடித்ததில், 5 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், 14, வெங்கடேஷ், 15, முகேஷ், 12, ராஜவேல், 10, ராஜேஷ், 13. இவர்கள் 5 பேரும் நேற்று மாலை, 6:00 மணியளவில் சமத்துவபுரம் அருகே உள்ள குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, 'டி' குடியிருப்பு பகுதியில் உள்ள முதல் தளத்தின் மேல் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் பைப் போன்று இருந்த மர்ம பொருளை சிறுவன் கோவிந்தராஜ் எடுத்து கீழே வீசினார். அந்த பொருள் சத்தத்துடன் வெடித்து அப்பகுதி புகை மண்டலமானது.
வெங்கடேஷ், முகேஷ், ராஜவேல், ராஜேஷ் ஆகிய 4 பேருக்கு கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. கோவிந்தராஜ் காது பாதிக்கப்பட்டது. படுகாயமடைந்த 5 சிறுவர்களும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.