/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
/
3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
ADDED : பிப் 27, 2024 10:31 PM
கடலுார், - கடலுார் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு:
சுகாதாரத் துறை சார்பில் போலியோ என்ற இளம்பிள்ளை வாதம் நோய் தடுக்கும் வகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்கள் வரும் 3ம் தேதி நடக்கிறது.
மாவட்டத்தில் 6 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 8,903 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையம், அங்கன்வாடி, பஸ் நிலையம், ரயில் நிலையம், சத்திரம், தேசிய நெடுஞ்சாலை என 1,611 மையங்களில் சொட்டு மருந்து போடப்படுகிறது. 7 சிறப்புக் குழுக்கள் அமைத்து, முகாமிற்கு 4 பேர் வீதம் 6,444 பணியாளர்கள், 196 மேற்பார்வையாளர்கள் என பணியில் ஈடுபடுவர்.
3ம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாட்களில் பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று பார்வையிட்டு சொட்டு மருந்து போடுவர். அதனால் பெற்றோர்கள் தங்கள் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்னரே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 3ம் தேதி நடக்கும் முகாமிற்கு அழைத்து வந்து கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் கடலுார் மாவட்டத்தில் இளம்பிள்ளை வாதம் நோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

