/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
/
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
ADDED : செப் 07, 2025 06:48 AM

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி கலால் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம், வான்பாக்கம் அருகே கஸ்டம்ஸ் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.
அவர்கள் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார், 1 கி.மீ., துாரம் துரத்தி சென்று பிடித்தனர். இவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இருவரிடம் நடத்திய விசாரணையில், திருக்கோவிலுார் அடுத்த பகண்டை கிராமம் அய்யன் மகன் சேது,22; சங்கராபுரம், அரியலுார் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து மகன் சக்திவேல்,24; என்பதும், மதுபாட்டில்களை கடத்திய வந்ததும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பைக் மற்றும் 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.