ADDED : மார் 23, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், துணை தாசில்தார்கள் கோவிந்தன், செல்வமணி முன்னிலை வகித்தனர். அதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு எளிமையான முறையில் பயிற்சி அளிப்பது.
பழுதுகளை சரிபார்ப்பது, பாதுகாப்பாக பூட்டி, சீல் வைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 286 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் மண்டல அலுவலர்கள் 30 பேர் பங்கேற்றனர்.

