/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரியில் காலாவதி மருந்துகள் கொட்டுவது தடுக்கப்படுமா
/
ஏரியில் காலாவதி மருந்துகள் கொட்டுவது தடுக்கப்படுமா
ஏரியில் காலாவதி மருந்துகள் கொட்டுவது தடுக்கப்படுமா
ஏரியில் காலாவதி மருந்துகள் கொட்டுவது தடுக்கப்படுமா
ADDED : ஏப் 24, 2024 07:23 AM

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்டபுரம் கிராமத்தில், 180ஏக்கர் பரப்பளவுடைய பீமனேரி உள்ளது.
இந்த ஏரியில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு காலாவதியான மருந்து, மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ்., பவுடர் பாக்கெட்டுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது.
இதை அவ்வழியே சென்ற இளைஞர்கள் சிலர் பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தகவலறிந்த மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், நேற்று மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்த ஏரிக்கு சென்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வ செய்தார்.
அருகிலேயே சில மாதங்களுக்கு முன் கொட்டப்பட்ட மாத்திரைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, பல மாதங்களாகவே காலாவதியான மருந்து, மாத்திரைகள் இதுபோல கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், காலாவதியான மருந்து, மாத்திரைகளை முறையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

