/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெயிலில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கணேசனுக்கு வரவேற்பு
/
வெயிலில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கணேசனுக்கு வரவேற்பு
வெயிலில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கணேசனுக்கு வரவேற்பு
வெயிலில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கணேசனுக்கு வரவேற்பு
ADDED : ஏப் 11, 2024 11:51 PM

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய கிராமங்களில் வெயிலை பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கணேசனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன ஓட்டு சேகரி்த்து வருகிறார்.
நேற்று திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, மங்களூர் ஒன்றியத்தில் மலையனுார், மா.புதுார், மா.கொத்தனார், வள்ளிமதுரம், ஒரங்கூர், புலிகரம்பலுார்ர், தச்சூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெயிலை பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தார். அப்போது, கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராமப்புற வளர்ச்சிகளில் மிகவும் கவனம் செலுத்துகிறார். குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறார்.
பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவச பஸ் வசதி, இல்லம் தேடி மருத்துவம், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எனவே, மத்தியில் நிலையான ஆட்சி அமைய காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு கை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற்ற செய்ய வேண்டும்' என்றார்.
தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, வி.சி., கட்சி மாவட்ட செயலர் திராவிடமணி, மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், சுப்ரமணியன், ராஜசேகர், தி.மு.க., நிர்வாகிகள் குமணன், திருவள்ளுவன், சின்னதுரை, சேகர், ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

