/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுபாளையூரில் வி.சி., கட்சி ஆலோசனை கூட்டம்
/
சிறுபாளையூரில் வி.சி., கட்சி ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 25, 2024 03:56 AM
கடலுார்: வி.சி., கட்சி சார்பில், சிறுபாளையூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாநில நிர்வாகிகள் ஜான்சன் முரளி முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் ரகு சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் அம்பேத், நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சிறுபாலையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தேர்தலின்போது தாக்கப்பட்ட சம்பவம் நடந்ததால், தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

