ADDED : மே 25, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகில் பைக்கில் சென்ற 2 வாலிபர்கள், அரசு பஸ் மோதி இறந்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த குத்தப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கிரி,21; கலைசெல்வன், 21; இருவரும் நேற்று இரவு பரங்கிப்பேட்டையில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரில் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது.
அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

