/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 05, 2024 05:00 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதி களில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் லோக்சபா தேர்தலுக்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 38 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியும் நடக்கிறது.
இந்நிலையில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் நேற்று ஆய்வு செய்தார்.
அங்கு மக்கள் பயமின்றி வந்து ஓட்டளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மேலும், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் அன்வர்தீன், கமிஷனர் கிருஷ்ணராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

