/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோடியை எதிர்த்து பேசுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் சிதம்பரத்தில் திருமாவளவன் பேச்சு

ADDED : ஏப் 16, 2024 06:18 AM

காட்டுமன்னார்கோவில், : சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் நேற்று சிதம்பரம் மற்றும் கிள்ளை பகுதி கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் நேற்று பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து கொத்தங்குடி, குமாரமங்கலம், பிச்சாவரம், தா.சோ.பேட்டை, கனக்கரப்பட்டு, உத்தமசோழமங்கலம், கொடிப்பள்ளம், தில்லைவிடங்கன், கிள்ளை பகுதியில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிவரன் தலைமையில், வேட்பாளர் திருமாளவன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ., அரசை எதிர்த்து பேசுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நானும் மத்திய அரசை எதிர்த்து பேசி வருகிறேன் என்பதற்காக எனது வீட்டை வருமான வரி அதிகாரிகளை விட்டு சோதனை செய்துள்ளனர். இதற்கெல்லாம் நாம் அஞ்சவில்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான், இந்தியா முழுவதும், உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, இண்டியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் ஒருங்கிணைத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் அமைச்சர் பன்னீர்செல்வம் நமக்காக, தேர்தலிலும் உழைத்து வெற்றி பெற செய்துள்ளார். கடந்த முறை போல் இந்த முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி இருக்க கூடாது. பானை சின்னத்தில் வாக்களித்து, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.