/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தையல் கலைஞர்கள் சங்க விழா எம்.எல்.ஏ., நினைவு பரிசு வழங்கல்
/
தையல் கலைஞர்கள் சங்க விழா எம்.எல்.ஏ., நினைவு பரிசு வழங்கல்
தையல் கலைஞர்கள் சங்க விழா எம்.எல்.ஏ., நினைவு பரிசு வழங்கல்
தையல் கலைஞர்கள் சங்க விழா எம்.எல்.ஏ., நினைவு பரிசு வழங்கல்
ADDED : ஜூலை 29, 2024 05:24 AM

கடலுார், : கடலுாரில் தையல் கலைஞர்கள் நலச்சங்க முப்பெரும் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
கடலுாரில் உயர்க தையற்கலை - தையல் கலைஞர்கள் நலச்சங்க கடலுார் கிளை ஆண்டு விழா, நலச்சங்கம் துவக்கம், நிர்வாகிகள் அறிமுகம் என முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சுகந்தி ரமாபாய் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தீன், செயலாளர் அகிலன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., தையல் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசினார். ஊராட்சித் தலைவர் சரவணன், லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, தொழிலதிபர் ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் எழிலரசு பயிற்சி அளித்தார்.
விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.