/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி 2ம் தேதி துவக்கம்
/
அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி 2ம் தேதி துவக்கம்
அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி 2ம் தேதி துவக்கம்
அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி 2ம் தேதி துவக்கம்
ADDED : மார் 30, 2024 06:36 AM
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் 2ம் தேதி துவங்குகிறது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் 2ம் தேதி முதல் துவங்குகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 12 நாள் பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய் ஆகும். பயிற்சி நேரம் ஒரு மணி நேரம்.
பயிற்சி கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது யூ.பி.ஐ.,மூலமாக அலுவலகத்தில் செலுத்தலாம். கட்டணம் செலுத்த ஆதார் கார்டு அவசியம்.
மேலும், விவரங்களுக்கு 94426 58016, 74017 03495 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.