/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நெய்வேலியில் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரம்
/
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நெய்வேலியில் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரம்
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நெய்வேலியில் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரம்
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நெய்வேலியில் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரம்
ADDED : ஏப் 15, 2024 04:27 AM

வடலுார், : கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நெய்வேலியில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரம் செய்தார்.
கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30ல் பிரசாரத்தை துவக்கினர்.
சூப்பர் பஜார், மெயின் பஜார், சிலோன் குடியிருப்பு, பாரதி நகர் உட்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
சொரத்துார் ராஜேந்திரன் பேசுகையில், 'நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -30, வட்டம் -21 ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை சிவக்கொழுந்து நிறைவேற்றித் தருவார்.
என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னைகளை லோக்சபாவில் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வார். கோரிக்கைகள் நிறைவேற சிவக்கொழுந்திற்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
சிவக்கொழுந்து பேசுகையில், 'இப்பகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அனுகலாம். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். முரசு சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட பேரவை செயலாளர் வக்கீல் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் பாஷியம், வினோத், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், பொருளாளர் தேவநாதன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், நகர தலைவர் வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேவானந்தம், ஜோதி, நகர நிர்வாகிகள் ராமலிங்கம், கஞ்சமலை, பாலசுப்ரமணியன், செல்வராஜ், மதிவாணி, ரவி, அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி திருமலைவாசன், தே.மு.தி.க., நிர்வாகிகள் வைத்தி, முருகன் உடனிருந்தனர்.

