ADDED : ஏப் 24, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டத்தில், விருத்தகிரீஸ்வரர் வீற்றிருக்கும் சப் டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் நிலைய பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் தொடர் மணல் கொள்ளை நடக்கிறது.
இதுதெரிந்த போலீசார் மணல் கொள்ளையை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால் மாட்டுவண்டி உரிமையாளரும் தாராளமாக விடிய விடிய மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையறிந்த சிலர் மாட்டு வண்டிகளை வாங்கி, மணல் கொள்ளைக்கு வாடகைக்கு விட்டு, அதிலும் காசு பார்ப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் மணல் திருட்டு தடுப்பது மட்டும் எப்போது என தெரியவில்லை.

