/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு 35 கன அடி நீர் திறப்பு பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

ADDED : மே 25, 2024 12:54 AM

சேத்தியாத்தோப்பு: பின்னலுார் வாலாஜா ஏரியிலிருந்து சென்னைக்கு 35 கன அடிநீர் அனுப்பி வருவதால் விவசாய பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் முகப்பில் துவங்கி கரைமேடு வரை 1,800 ஏக்கர் பரப்பளவில் வாலாஜா ஏரி அமைந்துள்ளது. ஏரிக்கு நீர் ஆதாரமாக இருந்த வீராணம் ஏரி இந்தாண்டு துவக்கத்திலே வற்றியது. தற்போது என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீர் மட்டுமே ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், சென்னை குடிநீருக்கு வீராணம் ஏரியில் தண்ணீர் எடுத்து அனுப்ப முடியாததால், மெட்ரோ நிறுவனம் வாலாஜா ஏரி வாய்க்காலில் ஆழ்துறை கிணறு அமைத்து ராட்சத மின் மோட்டார் மூலம் வினாடிக்கு 35 கன அடி நீரை கடந்த பிப்ரவரி மாதம் முதல் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதனால், வாலாஜா ஏரி நீரை நம்பி ஏற்கனவே நடவு செய்துள்ள நவரை பட்ட நெற்பயிர், தற்போது குறுவை நெல் நடவு பணிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கும் அபாயம் உள்ளது.