ADDED : மே 25, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அப்போது பைக்கில் (டி.என்.31.பிடி.4787) பின் பக்க சீட்டில் இரு பேட்டரிகளை எடுத்துக் கொண்டு ஒருவர் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
அப்போது பைக்கை நிறுத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். அதன் பின் போலீசார் பைக்குடன் பேட்டரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

