/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை; சி.என்.பாளையம் மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை; சி.என்.பாளையம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை; சி.என்.பாளையம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை; சி.என்.பாளையம் மக்கள் அவதி
ADDED : ஆக 23, 2024 12:25 AM
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மக்கள் பாதிப்பது தொடர்கிறது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால், மின்சாதன பொருட்கள் பழுதாகியது.
நெசவாளர்கள் மினிபவர்லுாம் தறிகளை இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இதனால், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சித்தரசூர் துணை மின் நிலையத்திலிருந்து சி.என்.பாளையம் நகர பகுதிக்கு தனியாக 22 கிலோ வாட் மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
புதிய மின்பாதை அமைக்க உயரமான மின்கம்பங்கள் நடப்பட்டது. ஆனால் இந்த மின்பாதையில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு மரங்களின் கிளைகள் இடையூறாக உள்ளது. அதனை வெட்டி எடுக்க அறநிலைத்துறை அனுமதி தராததால், மின்துறையினர், மின்பாதை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டனர்.
மூன்று மாதங்கள் ஆகியும் பணி துவங்காததால், மக்களின் அவதி தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மின்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

