/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு
/
கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு
கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு
கடலுார் மாவட்டத்தில் 'டெங்கு' குழந்தை உட்பட 4 பேர் பாதிப்பு
ADDED : மே 16, 2024 09:12 PM
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடலுாரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இவர்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், புவனகிரியை சேர்ந்த இளம்பெண், விலங்கல்பட்டை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தை, கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி அடுத்த காட்டுக்கொல்லையை சேர்ந்த 2 வாலிபர்கள் என, மொத்தம் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.