/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார வளாகம் செயல்பட வலியுறுத்தி வருகிறேன்: 5வது வார்டு கவுன்சிலர் சரவணன் பேட்டி
/
சுகாதார வளாகம் செயல்பட வலியுறுத்தி வருகிறேன்: 5வது வார்டு கவுன்சிலர் சரவணன் பேட்டி
சுகாதார வளாகம் செயல்பட வலியுறுத்தி வருகிறேன்: 5வது வார்டு கவுன்சிலர் சரவணன் பேட்டி
சுகாதார வளாகம் செயல்பட வலியுறுத்தி வருகிறேன்: 5வது வார்டு கவுன்சிலர் சரவணன் பேட்டி
ADDED : ஜூன் 29, 2024 05:50 AM

நெல்லிக்குப்பம் : 'சுகாதார வளாகம் செயல்படவும், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளையும் செய்ய நகர மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன்' என 5வது வார்டு கவுன்சிலர் சரவணன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும், கூறியதாவது:
எனது வார்டில் 1300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவிலும், செல்லியம்மன், அங்காளம்மன் கோவில்களும் உள்ளது.
நான் கவுன்சிலராக பொறுப்பேற்றது முதல் எனது முயற்சியால் வார்டில் பெரும்பாலான சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன.
கழிவுநீர் கால்வாய்களை அடிக்கடி சுத்தம் செய்து வருகிறேன். மின்சார பிரச்னையை தீர்க்க புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளேன். மேலும் பல ஆண்டு கோரிக்கையான கரும காரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
என் வார்டில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்களும், அங்காளம்மன் கோவில் தெருவில் சிறு பாலமும் சேதமடைந்துள்ளது.
சுகாதார வளாகம் செயல்படவும், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளையும் செய்ய நகர மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். மக்கள் நலன்கருதி சமுதாய கூடமும், நுாலகமும் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
வார்டுக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கழிவுநீர் கால்வாயை கட்டி தர வேண்டும்.
இவைகள் அனைத்தையும் அமைச்சர் கணேசன், சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஒத்துழைப்போடு எனது பதவி காலம் முடிவதற்குள் செய்து தர திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சரவணன் கூறினார்.

