ADDED : ஏப் 04, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாலத்தில் கூழாங்கல் கடத்த பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்க துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி 3 யூனிட் கூழாங்கல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் சுரேஷ் மற்றும் தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

