/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதி கோவிலில் தீ மிதி திருவிழா
/
திரவுபதி கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED : மே 19, 2024 06:21 AM

விருத்தாசலம் : ஊ.கொளப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோவிலில், சித்திரை மாத தீமிதி திருவிழா, கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், அம்மன் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, வில் வளைப்பு, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வுகள் மற்றும் இரவு வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் தீமிதி உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணியளவில், அரவான் களபலி நடந்தது.
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், மாலை 5:00 மணிக்கு மேல், திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

