/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு
/
ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு
ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு
ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 08, 2024 06:00 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரயில் தண்டவாளம் அருகே குப்பை கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அருகே உள்ள எறுமனுார் புறவழிச்சாலையோரம் குப்பை கழிவுகள் குவியலாக கொட்டி கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று மர்ம முறையில் இந்த குப்பை கழிவுகள் தீ பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர், அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதன்பின், குப்பை கழிவுகளை தண்டவாளம் அருகே கொட்டக்கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்களை ரயில்வே போலீசார் எச்சரித்து சென்றனர்.