/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் விபத்துக்களை தவிர்க்க மின்துறை ஆலோசனை
/
மின் விபத்துக்களை தவிர்க்க மின்துறை ஆலோசனை
ADDED : ஆக 13, 2024 05:49 AM
கடலுார்: வீடுகளில் மின் விபத்துக்களை தவிர்க்க ஆர்.சி.டி., கருவி பொருத்த, மின்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
கடலுார் மின்துறை மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமீபகாலமாக மின்நுகர்வோரின் அறியாமை காரணமாக மின்விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, தற்போது புதிய மின் இணைப்புகளில் ஆர்.சி.டி. என்கிற ஒரு புதிய கருவி பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆர்.சி.டி., கருவி மின் இணைப்பு வளாகத்தில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து மின் விபத்தில் இருந்து பாதுகாக்கிறது.
இதனால் உயிரிழப்புகள் தடுக்கப்படும். புதிய மின் இணைப்புகளில் இக்கருவி பொருத்தாவிட்டால் கண்டிப்பாக மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே ஆர்.சி.டி., கருவி பொருத்துப்படாத பழைய மின் இணைப்புகளில் இதை கண்டிப்பாக பொருத்தி மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.
மேலும், வீடுகளில் உபயோகிக்கும் சிங்கிள் பேஸ் மின்சாதன உபகரணங்களான கிரைண்டர், அயன்பாக்ஸ், மிக்சி, வாட்டர் பம்ப், குளிர்சாதன பெட்டி, வாட்டர் ஹீட்டர் போன்ற அனைத்தும் 3 பின் சாக்கெட் மூலமாகவே பொருத்தப்பட வேண்டும். அனைத்து 3 பின் சாக்கெட்டுகளில் மூன்றாவது பின்னை அனைத்து மெயின் எர்த் டெர்மினரில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மின் அதிர்வு மற்றும் மின் விபத்தை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

