/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
/
மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
ADDED : ஏப் 24, 2024 01:01 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் குடிநீர் பிரச்னையை கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் 1 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது மற்றும் மக்காத குப்பையில் பிளாஸ்டிக் பைகளை தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டார். செயல்படாத பஸ் நிலையத்தை பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். அங்கு நகராட்சி மூலம் வைக்கப்பட்ட குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். இரு இடங்களில் கட்டப்படும் பாலம் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் எரிவாயு தகனமேடை, 1 கோடியே 20 லட்சத்தில் கட்டப்படும் மருத்துவமனை கூடுதல் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களிடம் முறையாக சிகிச்சை அளிக்கபடுகிறதா என கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வேலை செய்யாததால் குடிநீருக்கு நோயாளிகள் சிரமப்படுவதாக கவுன்சிலர் சத்யா புகார் கூறினார். இதனால் கடுப்பான கலெக்டர், அதிகாரிகளை கடிந்து கொண்டார். அதைதொடர்ந்து ஒரு மணி நேரத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் சரி செய்யப்பட்டது.
குப்பை சேகரிக்க இடமில்லாததால் நகரம் முழுவதும் குப்பை மேடாக உள்ளதாக மக்கள் புகார் கூறினர்.பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

