/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை விருத்தாசலத்தில் அருண்மொழித்தேவன் பேச்சு
/
தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை விருத்தாசலத்தில் அருண்மொழித்தேவன் பேச்சு
தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை விருத்தாசலத்தில் அருண்மொழித்தேவன் பேச்சு
தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை விருத்தாசலத்தில் அருண்மொழித்தேவன் பேச்சு
ADDED : ஏப் 05, 2024 05:05 AM

விருத்தாசலம்: 'பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை' என அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து விருத்தாசலம் கடைவீதியில் அவர் பேசுகையில், 'காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு, அவரது அக்கா சவுமியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க., தலைவரின் மனைவி, காங்., வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிப்பதை, பா.ம.க., தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களை, உங்கள் ஓட்டுகளை விற்கின்றனர். தலைவர் என்ற பெயரில் உங்களை ஏமாற்றுபவருக்கு பாடம் புகட்ட, பாட்டாளிகள் முரசு சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
பேரிடர், வெள்ளம், கொரோனா வந்தபோதும் அனைத்தையும் சமாளித்து திட்டங்களை வழங்கினார் பழனிசாமி. விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தருந்தார். அ.தி.மு.க., ஆட்சியில் எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், அருளழகன், மண்டல செயலாளர் அருண், நகர துணைச் செயலாளர் மணிவண்ணன், அரசு வழக்கறிஞர் விஜயகுமார்.
ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ், நகர அவைத் தலைவர் தங்கராசு மற்றும் மாநில துணை பொதுச் செயலாளர் வேல்முருகன்.
மாவட்ட பொருளாளர் ராஜ், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாநில செயற்குழு ரமேஷ், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், பொருளாளர் கருணா, மாவட்ட பிரதிநிதி பாலா, நகர துணை செயலாளர் கெங்காசலம், டைலர் பாலமுருகன் உட்பட 33 வார்டுகளின் வட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.

