/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாராய வியாபாரி மிரட்டும் ஆடியோ கடலுார் மாவட்ட போலீசார் விளக்கம்
/
சாராய வியாபாரி மிரட்டும் ஆடியோ கடலுார் மாவட்ட போலீசார் விளக்கம்
சாராய வியாபாரி மிரட்டும் ஆடியோ கடலுார் மாவட்ட போலீசார் விளக்கம்
சாராய வியாபாரி மிரட்டும் ஆடியோ கடலுார் மாவட்ட போலீசார் விளக்கம்
ADDED : ஏப் 29, 2024 05:05 AM
கடலுார், : ஸ்ரீமுஷ்ணத்தில் தன்னை கொல்ல முயற்சிப்பதாக ஒருவர் சமூக வலைதளத்தில் கூறும் ஆடியோ பொய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கண்டியங்குப்பத்தை சேர்ந்த ஜேசுதாஸ், 44; இவர், ராமாபுரத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பதாகவும், இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, மதுபாட்டில்கள் விற்பவர்களிடம் என்னை பற்றி போலீசார் தகவல் தெரிவித்ததால் அவர்கள் என்னை கொல்ல முயற்சிப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கூறும் ஆடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது.
அதன்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய போது, டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கொளத்தங்குறிச்சி ஸ்டாலின் ராஜ்,44; ஜேக்கப்,34; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை மிரட்டி ஓசியில் மது வாங்கி குடிப்பதை ஏசுதாஸ் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு ஓசியில் மது தராததால், சிலர் மிரட்டுவதாக பொய் தகவலை பரப்பியது விசாரணையில் தெரிய வந்தது. நடந்த சம்பவம் குறித்து ஜேசுதாஸ் போலீசில் புகார் அளிக்கவில்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

