ADDED : ஏப் 04, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஜனதா-1 ரேஷன் கடையில், கூட்டுறவு துறை மூலம் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு அவசியம் குறித்து பொதுமக்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் இம்தியாஸ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ரவிசங்கர், சரண்யா, லீமால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

