/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வி.சி., நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
/
காங்., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வி.சி., நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
காங்., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வி.சி., நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
காங்., வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வி.சி., நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு
ADDED : மார் 30, 2024 06:51 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் நடந்த காங். ,வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில் வி.சி., நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் அறிமுகக்கூட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் கிராமத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ராதாகிஷ்ணன், அகில இந்திய காங்., உறுப்பினர் மணிரத்னம், த.வா.க., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திருமால்வளவன், வி.சி.,கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூ., மா.கம்யூ., மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரித்தார். அப்போது மேடையில் இருந்த வி.சி., மாவட்ட செயலாளர் திராவிடமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழன்பன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அமைச்சர் கணேசன் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தார். இரவு 7:40 மணிக்கு கூட்டம் முடிந்து நிர்வாகிகள் புறப்படும் நேரத்தில் வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழன்பன் மீது சேர்களை வீசி தாக்கினர்.
அதில், தமிழன்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

