/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா
/
வரவூரம்மன் கோவிலில் சக்ர செடல் தேர் திருவிழா
ADDED : ஏப் 23, 2024 05:33 AM

கடலுார், : கடலுார் புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில், சக்ர செடல் தேர் திருவிழா நடந்தது.
அதையொட்டி, கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு சக்தி கரகங்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை கும்பம் படைத்தல், இரவு 7:00 மணிக்கு காமதேனு வாகனத்தில் வரவூர் மாரியம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு சக்ர செடல் தேர் வீதியுலா, பக்தர்கள் செடல் போடுதல், மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று (23ம் தேதி) மாலை 6:00 மணிக்கு சித்ரா பவுர்ணமி காளி பூஜை, மகா தீபாராதனை, சிம்ம வாகனத்தில் காளிகா பரமேஸ்வரி வீதியுலா, 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு கங்கை அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி காலை 9:01 மணிக்கு விஸ்வரூப சூலத்தம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது.

