/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வணிக தொடர்பாளர்கள் ஸ்டேட் வங்கியில் கவுரவிப்பு
/
வணிக தொடர்பாளர்கள் ஸ்டேட் வங்கியில் கவுரவிப்பு
ADDED : மே 16, 2024 11:31 PM

கடலுார்: ஸ்டேட் பாங்க் திருப்பாதிரிபுலியூர் கிளை சார்பில் வணிக தொடர்பாளர்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கிளை ஸ்டேட் பாங்க் சார்பில், வணிகத் தொடர்பாளர்களுக்கு பரிசளிப்பு விழா கடலுார் ஓட்டலில் நடந்தது. புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு தலைமை தாங்கினார். முதன்மை மேலாளர் சீனிவாசன், புதுச்சேரி மண்டல அலுவலக தலைமை மேலாளர் பரணிதரன், முதன்மை மேலாளர் லட்சுமணன் ராவ், மற்றும் முதன்மை மேலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக வங்கி துணை பொது மேலாளர் கல்பனா பங்கேற்று, சிறப்பாக செயல்பாடுகளால் சாதனை புரிந்த வணிக தொடர்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். துணை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

