/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழிச்சிக்குடி கோவில் கும்பாபிேஷகம்
/
அழிச்சிக்குடி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மே 14, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அடுத்த அழிச்சிகுடி பெரியமேடு செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை திருமுருகன் மற்றும் கலைவாணி கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷக பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகவேள்வி நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி, காலை 10:15 மணிக்கு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை திருமுருகன் திருப்பணி மன்ற குழுவினர் செய்திருந்தனர். திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

