/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
/
பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED : மார் 27, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பர்னிச்சர் கடையில் புகுந்த விஷ பாம்பு பிடிபட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் கமலக்கண்ணன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையில் அடுக்கி வைத்திருந்த மரம் சட்டங்களுக்குள் பாம்பு புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் வன ஆர்வலர் நெல்லிக்குப்பம் உமர்அலிக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி கொடிய விஷ தன்மையுள்ள 5 அடி நீளம் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார்.

