/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடைவிடாது சிலம்பம் சுற்றி 1,200 மாணவர்கள் சாதனை
/
இடைவிடாது சிலம்பம் சுற்றி 1,200 மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 29, 2024 06:32 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் 1,200 மாணவர்கள் பங்கேற்று, 33 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வீரத்தமிழர் தற்காப்பு சிலம்பம் விளையாட்டு கலைக்கூட பேரவை, ராயல்புக் ஆப் ரெக்கார்ட் இணைந்து, 'இயற்கை விவசாயம் செய்வோம், மக்கள் நலன் காப்போம்' உலக சாதனை நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
சிலம்பகலை ஆசிரியர் சிகாமணி வரவேற்றார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
சிலம்ப மாவட்ட செயலாளர் ராமலிங்கம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் டி.எஸ்.பி., பழனி, உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கடலுார், திருச்சி, பெரம்பலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அவர்கள் இடைவிடாமல் 33 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு, ராயல் புக் ஆப் ரெக்காட் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

