/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் நவீன மீன்பிடி துறைமுகம் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
/
கடலுாரில் நவீன மீன்பிடி துறைமுகம் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
கடலுாரில் நவீன மீன்பிடி துறைமுகம் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
கடலுாரில் நவீன மீன்பிடி துறைமுகம் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
ADDED : ஏப் 03, 2024 03:21 AM

கடலுார் : கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் ஓட்டுகள் சேகரித்தார்.
கடலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை, ஆதரித்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,-ஜெ., மற்றும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் ஆசியோடு சிவகொழுந்து போட்டியிடுகிறார். இவர் உள்ளூர் வேட்பாளர்.
சிவக்கொழுந்தை எப்போதும் சந்தித்து கோரிக்கை வைக்கலாம். கடலுார் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவருக்கு முரசு சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
வேட்பாளர் சிவக்கொழுந்து பேசுகையில், 'தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வழிகாட்டுதல்படி பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி மக்கள் சேவை செய்துள்ளேன். கடலுார் துறைமுகத்தில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாஷ்யம், கோவிந்தராஜ், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் சூரியமூர்த்தி, வடலுார் நகர செயலாளர் பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட மீனவரணி ராஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி தலைவர் மணியரசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில், கந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திருமலைவாசன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட துணை செயலாளர், தொகுதி பொறுப்பாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயபிரகாஷ், பழனிவேல், ஜெய்சங்கர், காசிராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

