/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கல்லுாரியில் படிக்கும்போதே போட்டித்தேர்வு எழுதலாம்'
/
'கல்லுாரியில் படிக்கும்போதே போட்டித்தேர்வு எழுதலாம்'
'கல்லுாரியில் படிக்கும்போதே போட்டித்தேர்வு எழுதலாம்'
'கல்லுாரியில் படிக்கும்போதே போட்டித்தேர்வு எழுதலாம்'
ADDED : மார் 13, 2024 01:25 AM
கோவை:கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், வேளாண் பல்கலையின் துணை வேந்தர் கீதாலட்சுமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் கல்லுாரியில் படிக்கும் போதே, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும்,'' என்றார்.
இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளை சேர்ந்த, 625 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்கலையளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற, 71 மாணவர்களுக்கு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லுாரி நிர்வாக தலைவர் சூரியகுமார், முதல்வர் சதீஷ்குமார் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.