/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக பகுப்பாய்வு குறித்து பணிமனை
/
வணிக பகுப்பாய்வு குறித்து பணிமனை
ADDED : பிப் 27, 2024 11:41 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், 'இன்னவேசன் கவுன்சில்' மற்றும் 'பிசினஸ் அனலடிக்ஸ் கிளப்' வாயிலாக, 'பிசினஸ் அனலடிக்ஸ்' (வணிக பகுப்பாய்வு) குறித்த பணிமனை நடந்தது.
கல்லுாரி இயக்குநர் பாலுசாமி, தலைமை வகித்தார். முன்னதாக, மாணவர், விஷ்ணுவியாஸ் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, பெங்களூரு சுரானா கல்லுாரி பேராசிரியர் கோகுலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, வணிகத்தில் முடிவெடுக்கும் திறன், பகுப்பாய்வு செய்தல், நிறுவன வளர்ச்சிக்கு பகுப்பாய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். முடிவில், மாணவி சம்வரதிகா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, துணை பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.

