/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் பணி துவக்கம்
/
ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் பணி துவக்கம்
ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் பணி துவக்கம்
ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் பணி துவக்கம்
ADDED : டிச 13, 2025 07:38 AM

வால்பாறை: வால்பாறை மலைப் பாதையில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது.
வால்பாறை -- பொள்ளாச்சி ரோட்டில், மழை காலங்களில் இயற்கை சீற்றத்தால் தடுப்புச்சுவர் இடிந்தும், மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
குறிப்பாக, ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில், கனமழையின் போது பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமானது. இந்நிலையில், சேதமடைந்த தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தற்போது நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, பல்வேறு இடங்களில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது, அட்டகட்டி, அய்யர்பாடி ஆகிய இடங்களில் தடுப்புச் சுவர் இடிந்து சேதமடைந்தது. தற்போது, மழைப் பொழிவு குறைந்த நிலையில் மூன்று இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

