/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
/
வாலிபால் மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 16, 2025 09:02 PM

கோவை: கோவை மாநகராட்சி, 83வது வார்டு நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வாலிபால், இறகுப்பந்து, கபடி மற்றும் சிறிய அளவிலான கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவ, மாணவியரும், ஏராளமான விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெறுகின்றனர். இவ்வளாகத்தில், 997.74 சதுர மீட்ட் பரப்பில், ரூ.1.95 கோடியில் சர்வதேச தரத்துக்கு வாலிபால் உள்விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. இரண்டு வாலிபால் மைதானங்கள், பார்வையாளர் மாடம், மேற்கூரை, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இப்பணியை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாரன் முன்னிலை வகித்தனர். தலைமை பொறியாளர் விஜயகுமார், மண்டல தலைவர் மீனா, உதவி கமிஷனர் நித்யா, நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

