/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் ஹேண்ட்பால் பயிற்சி முகாம் துவக்கம்
/
பெண்கள் ஹேண்ட்பால் பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : ஜன 25, 2026 05:06 AM
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பெண்கள் ஹேண்ட் பால் அணி பயிற்சி முகாம் துவங்கியது.
நடப்பு கல்வி ஆண்டில், 69வது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும், 19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணியில், திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், கோவை, விழுப்புரம், ஈரோடு, பழனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கற்பகவல்லி, பிரவீனா, வர்ஷினி, மகா ஸ்ரீ, வசந்தி, சுமித்ரா, அபினா, அபிநயா, அனுஸ்ரீ, சந்தியா, வி. சந்தியா, ஷாலினி, வினோதினி, அனுஷ்கா, வர்ஷா, ஜெயலட்சுமி உள்ளிட்ட, 16 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி முகாம் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இம்மாதம், 27 வரை நடக்கிறது. பயிற்சி முடித்தபின், இவர்கள் அனைவரும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குர்மர்வின் நகரில் பிப்., 1 முதல், 5ம் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்கின்றனர். பயிற்சி முகாமை, தமிழ்நாடு ஹேண்ட் பால் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

